Tuesday, 13 March 2012

மழை

போர் முரசு கொட்டியதோ மேகங்கள்,
வாள் வீச்சின் ஒளி கீற்றோ மின்னல்கள்,
மனிதர்கள் வானுக்கும் சென்று விட்டனரோ?
யார் யாருடன் சண்டை?
தோற்றாரும் வென்றாரும்
அழுகின்றனரோ- மழை!!!
மனிதன் இருந்தால்
மழைநீர் தித்திக்கதே??
மழை- மனிதன் செய்த அழுக்கினை
கழுவ வந்த இயற்கை!
குழந்தை ஆகிப்போன  இறைவனை
குதூகலிக்கச் செய்யும் வானின் உடைந்த குமிழ்கள்.

1 comment: